சிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்

சிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்
சிறுமியின் 8 மாதக் கரு கலைப்பு: உயிருக்கு ஆபத்து என தகவல்

நாமக்கல் அருகே 17 வயதுச் சிறுமியின் 8 மாதக் கருவை கலைக்க குடும்பத்தினர் செய்த முயற்சியில் சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் அருகே தாயில்லாமல் தந்தை, சகோதரருடன் வசித்து வந்த இந்தச் சிறுமி, 9 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளார். குடும்ப வறுமைக்காக கூலிவேலை செய்து வந்த சிறுமிக்கு, சங்கர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் கருத்தரித்த சிறுமி, தந்தைக்கும், சகோதருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டதாகக் தெரிகிறது. இந்நிலையில் 8 மாதக் கருவை சுமந்துகொண்டிருந்த சிறுமியின் கருவை கலைக்கும் முயற்சியில் தந்தையும், சகோதரனும் கருக்கலைப்பு மாத்திரை வாங்கித் தந்ததாக தெரிகிறது. 

இதனால், சிறுமியின் 8 மாதக் கரு கலைந்து ரத்தப்போக்குடன் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com