\
அதிவேகமாக கடலுக்குள் சென்ற நாட்டுப்படகு: உஷாராகி கடலிலேயே சுற்றிவளைத்த போலீஸ்; 8 பேர் கைது

அதிவேகமாக கடலுக்குள் சென்ற நாட்டுப்படகு: உஷாராகி கடலிலேயே சுற்றிவளைத்த போலீஸ்; 8 பேர் கைது

அதிவேகமாக கடலுக்குள் சென்ற நாட்டுப்படகு: உஷாராகி கடலிலேயே சுற்றிவளைத்த போலீஸ்; 8 பேர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி, எட்டு பேரை கைது செய்தனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் அங்கு சென்றபோது, கரையில் இருந்த நாட்டுப்படகு அதிவேகமாக கடலுக்குச் சென்றது. உஷாரடைந்த காவல்துறையினர் விசைப்படகு மூலம் விரைந்து நாட்டுப் படகை துரத்தி பிடித்தனர். தொடர்ந்து நடந்த சோதனையில் 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 8 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தியதில், போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் தற்போதைய சந்தைய மதிப்பு 30 கோடி ரூபாய் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com