"நாமக்கல்லில் கடந்த ஆண்டு 71 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது"- ஆட்சியர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 71 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “65 குழந்தை திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்த பெற்றோர் மற்றும் பிறர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்வாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அவற்றை தடுக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.
இவர்கள் அன்றி, பொதுமக்களும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தெரியவந்தால் 1098 அல்லது 181 என்ற இலவச தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்தி: ‘திருமண வயது அதிகரிப்பு’ மசோதா உண்மையிலேயே மாற்றம் தருமா?