\
கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது

கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது

கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது
Published on

திருத்தணியில் பதுங்கியிருந்த சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை பைபாஸ் சாலையில் முத்தப்பன் என்பவரது வீட்டில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருத்தணியைச் சேர்ந்த சீனு, கார்த்திக் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹரி, சுரேஷ், சந்தோஷ், ராஜ்குமார், முருகன் ஆகியோர் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து 2 பட்டாக்கத்தி, 1 பட்டன் கத்தி, 8 செல்போன் மற்றும் 300 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அனைவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு ஆதரவு தருவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com