மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ, பைக் பந்தயங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது!

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ மற்றும் பைக் பந்தயங்களில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: எழில்

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றம் அருகே கடந்த 15-ஆம் தேதி ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு சட்ட விரோதமாக பந்தயம் நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வைத்திருந்த இளைஞர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.

Police station
Police stationpt desk

இந்த ரேஸை வேடிக்கை பார்க்க சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே ஆட்டோ மோதி உயிரிழந்தனர். இது குறித்த செய்தி வெளியான நிலையில் விசாரணை மேற்கொண்ட செம்பியம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், அண்ணா நகர் முகப்பேர் பகுதியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் சந்துரு என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரமேஷ், கௌதம், பிரேம்குமார் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.

Accused
மின்மயான கழிவுகளை பழங்குடி மக்கள் நிலத்தில் கொட்டியதா ஈஷா? பார்வையிட சென்றவர்கள் மீதும் தாக்குதல்..

இவர்கள் மீது அதிபயங்கரமாக வாகனங்களை ஓட்டுதல், பொது மக்களை அச்சுறுத்தல், வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல், வாகனம் ஓட்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், காயம் ஏற்பட்டுத்தல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com