\
எச்சரிக்கை! கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் கும்பல்

எச்சரிக்கை! கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் கும்பல்

எச்சரிக்கை! கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் கும்பல்
Published on

சென்னை தண்டையார்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இரவு நேரங்களில் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார், சந்தேகத்துக்கிடமாக இருந்த வீட்டை நோட்டமிட்டனர். மேலும், வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கணவனை பிரிந்து வாழும் பெண்களின் மனநிலையை பேசி மாற்றி இவ்வாறு தனியே அழைத்து தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த 7 பேரை போலீசார் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமிகளை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானதையடுத்து தண்டயார்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com