65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள் - அதிர்ச்சி தரும் அரசு பதிவு

65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள் - அதிர்ச்சி தரும் அரசு பதிவு

65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள் - அதிர்ச்சி தரும் அரசு பதிவு
Published on

பீஹார் மாநிலத்தில் முசாபர்பூர் மாவட்டத்தின் முசாஹரி தொகுதியில் உள்ள சோதி கோதியா கிராமத்தில் வசிப்பவர் லீலா தேவி (65). இவர் தனது நான்காவது குழந்தையான ஒரு பையனை கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்தார். மாவட்டத்தில் உள்ள தேசிய சுகாதாரத் திட்டத்தின் (என்.எச்.எம்) கீழ் தேசிய மகப்பேறு நன்மை பெறும் (என்.எம்.பி.எஸ்) பல பயனாளிகளில் இவரும் ஒருவர்.

இந்தத் திட்டத்தின் கீழ், தாய்க்கு 1,400 ரூபாயும், ஏ.எஸ்.ஹெ.ஏ தொழிலாளிக்கு ரூ .600 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. லீலாதேவியின் கணவர் ஒரு விவசாயி. கடந்த 18 மாதங்களில் லீலா எட்டு முறை குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக எச்.டி வைத்திருக்கும் ஆவணங்கள் காட்டுகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் இவர் பயனாளியாக சேர்க்கப்பட்டது ஒரு வாரத்திற்கு முன்புதான் இவருக்கு தெரியவந்துள்ளது. இவரது கணக்கு இருக்கும் ஆபரேட்டர் மையத்தை அணுகியபோது, வழக்கு தாக்கல் செய்யவேண்டாம் எனவும், இவர் பெயரில் பெறப்பட்ட பணத்தைத் திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின்கீழ் லீலாவின் பெயர் மட்டுமல்ல, ஒரே மாவட்டத்தின் 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் அடிக்கடி பணம் டெபாசிட் செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோல் மற்றொரு பெண் சாந்தி தேவி(66) ஒரே இரவில் 10 மணிநேர இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக காட்டப்பட்டுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த சபீனா கட்டூன்(59) என்ற பெண்ணும் பயனாளியாக காட்டப்பட்டுள்ளார்.

மோசடி வெளிச்சத்திற்கு வந்த பின்னர், மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி முசஹாரியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர் சரஞ்சித் குமார், சிஎஸ்பி மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதிலும், ஆனால் அவருக்கு இதுபற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த பரிவர்த்தனை முறையில் விரல் அச்சு மற்றும் ஆதார் அடையாள அட்டை இணைக்கப்பட்ட போதிலும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com