\
வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பத்தராத இளம்பெண்: பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பத்தராத இளம்பெண்: பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பத்தராத இளம்பெண்: பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
Published on

கூடலூர் அருகே வட்டிக்கு பெற்ற பணத்தை திரும்பத் தராத 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் நாடுகாணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணிற்கு 3 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கொடுத்துள்ளார். பெற்ற பணத்தை அப்பெண் நீண்ட காலமாக திரும்ப கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அந்த பெண்ணிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றால் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒப்புகொள்ள வேண்டும் என  பாலகிருஷ்ணன் எழுத்துபூர்வமாக வாங்கியுள்ளார். அதன்படி தொடர்ந்து அப்பெண்னை வீட்டிற்கு அழைத்த அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பாலகிருஷ்ணனை இன்று கைது செய்தனர். அவர்மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com