ஹைதராபாத்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

ஹைதராபாத்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

ஹைதராபாத்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் சடலமாக மீட்பு
Published on

ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், தண்டவாளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயதான சிறுமியை, பல்லகொண்டா ராஜு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்தனர். மேலும், தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி, பல்லகொண்டா ராஜு என்கவுண்டர் செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தெலங்கானாவில், கான்பூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், பல்லகொண்டா ராஜு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளாதாகக் போலீசார் கூறியுள்ளனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடலில் உள்ள டாட்டூ மற்றும் அடையாளங்கள் ஒத்துப்போவதால் அதைவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com