\
உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்:  பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 6 வயது சிறுமி.!

உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 6 வயது சிறுமி.!

உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 6 வயது சிறுமி.!
Published on

ஹத்ராஸை பூர்விகமாகக் கொண்ட 6 வயது சிறுமி, தனது தாயின் மறைவுக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள, இக்லாஸ் என்ற பகுதியில் தனது உறவினருடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் சிறுவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உடலைப் பெற்ற அவரின் உறவினர்கள், சாதாபாத் - பால்தேவ் சாலையில் உடலை வைத்து, குற்றம்புரிந்த சிறுவனை கைது செய்யவேண்டும் எனவும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மெத்தனம் காட்டிய போலீஸாரின் செயலை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அலிகாரின் எஸ்.எஸ்.பி முனிராஜ் குற்றவாளியை கைதுசெய்வது குறித்து எந்த முயற்சியும் எடுக்காததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com