\
சிவகாசி தொழிலதிபர் கொலை வழக்கு - 6 பேர் கைது

சிவகாசி தொழிலதிபர் கொலை வழக்கு - 6 பேர் கைது

சிவகாசி தொழிலதிபர் கொலை வழக்கு - 6 பேர் கைது
Published on

சிவகாசி அருகே தொழிலதிபர் கொலை வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த சந்தனகுமார் என்பவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து சென்றவர், திருத்தங்கல் அருகேயுள்ள ஈஞ்சார் கண்மாய் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய சிவகாசி நகர் காவல்துறையினர், கொலைவழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

சந்தனகுமாருடன் கடைசியாக ஃபோனில் பேசிய சிவகாசி, நேரு காலனியைச் சேர்ந்த சோனைக்குமார் என்பவரை பிடித்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக, அவரும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சந்தனக்குமாரை காரில் ஏற்றிச்சென்று கொலை செய்து, உடலை கண்மாயில் வீசியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சோனைக்குமார் உட்பட 6 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com