நடிகை கௌதமியிடம் நில மோசடி: குற்றவாளிகள் 6 பேர் கேரளாவில் கைது

நடிகை கௌதமியின் நிலத்தை அபகரித்த குற்றவாளிகள் கேரளாவின் குன்னம்குளத்தில் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை கௌதமியின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கேரளாவின் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் உள்ள பகுதியில் தமிழக காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

நடிகை கௌதமி
நடிகை கௌதமிpt desk

தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை குன்னம்குளத்தைச் சேர்ந்த தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அங்கு வாடகைக்கு தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, குற்றவாளிகளை கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்கிய பஞ்சாயத்து உறுப்பினரின் கணவரிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது கைபேசியையும் காவல் துறையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்களை சென்னை குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை கொண்டு செல்ல உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com