15 வயது சிறுமியை திருமணம் செய்த 53 வயது வழக்கறிஞர் கைது

15 வயது சிறுமியை திருமணம் செய்த 53 வயது வழக்கறிஞர் கைது

15 வயது சிறுமியை திருமணம் செய்த 53 வயது வழக்கறிஞர் கைது
Published on

15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த 53 வயது வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது மனைவி காலமானதைத் தொடர்ந்து, 9-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்தார். தற்போது 15 வயதாகும் அந்தச் சிறுமி கடந்த 13 ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்தார். சிறுமி தனது புகாரில், பள்ளியில் படித்து கொண்டிருந்த தன்னை தாத்தா, பாட்டி கட்டாயப்படுத்தி வயது முதிர்ந்த வழக்கறிஞருக்கு, 2014-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், அவர் தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவருதாகவும் புகார் அளித்தார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த அவரது தாத்தா, பாட்டி ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வழக்கறிஞருக்கு ஏற்கனவே 15 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com