\
நண்பனின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - 51 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

நண்பனின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - 51 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

நண்பனின் 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - 51 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
Published on: 

நண்பனின் 12 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நண்பனின் 12வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் (51) என்பவர் பொதுநல சங்கம் என்ற தனியார் அமைப்பை வைத்து நடத்தி வருகிறார். இவர், தனது நண்பனின் 12 வயது மகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்று தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது 12 வயது சிறுமியிடம் முதியவரான அவர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை மகளிர் போலீசார் செந்திலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com