\
காதலனுடன் ஆபாச வீடியோ: மனைவியை கொலை செய்த கணவர்

காதலனுடன் ஆபாச வீடியோ: மனைவியை கொலை செய்த கணவர்

காதலனுடன் ஆபாச வீடியோ: மனைவியை கொலை செய்த கணவர்
Published on

காதலனுடனான ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததையடுத்து 50 வயது நபர் மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பிவாண்டி, அன்சர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் முகமது யூனுஸ்(50). இவரது மனைவி நஸ்ரின். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள். ஊரடங்கால் யூனுஸ் தனது வேலையை இழந்தார். இதனால் நஸ்ரின் தனது மூன்று குழந்தைகளுடன் நாகான் வட்டாரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் யூனுஸ் தனது மனைவி நஸ்ரினை கொலை செய்ததாக சாந்திநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நஸ்ரின் தனது காதலனான சதாம் என்பவருடன் ஒன்றாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது. அந்த வீடியோவை யூனுஸ் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நஸ்ரினின் சகோதரி வீட்டிற்கு சென்று நஸ்ரினை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com