\
குளத்தில் வீசப்பட்ட 5 மாத பச்சிளம் குழந்தை: அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

குளத்தில் வீசப்பட்ட 5 மாத பச்சிளம் குழந்தை: அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

குளத்தில் வீசப்பட்ட 5 மாத பச்சிளம் குழந்தை: அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
Published on

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள குளத்தில் இருந்து 5 மாத குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சேலையில் சுற்றி குளத்தில் வீசப்பட்ட குழந்தையின் உடலைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள வையங்குடி கிராமத்தில் உள்ள அம்மன் குளக்கரையில் சிவப்பு கலர் புடவையில் வைத்து 5 மாத மதிக்கத்தக்க கை குழந்தை அழுகிய நிலையில் யாரே வீசி சென்றனர். அந்த வழியாக பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்கள் அந்த குழந்தையை நாய்கள் சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகிலிருந்த இளைஞர்களிடம் கூறினர். உடனே இளைஞர்கள் காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் எந்த அதிகாரிகளும் வராத நிலையில் குழந்தைக்கு பாதுகாப்பாக சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர். பின்னர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்தக் குழந்தையை வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com