ஐதராபாத் விமான நிலையத்தில் 5 கிலோ கொக்கைன் பறிமுதல்! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஐந்து கிலோ எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
cocaine seized
cocaine seized pt desk

ஐதராபாத்தின் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அங்கு சோதனையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்நிலையில், டெல்லி செல்லும் பயணி ஒருவரை சந்தேகப்பட்டு அவரிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் கொக்கைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

cocaine
cocainept desk

இதையடுத்து அந்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்தபோது, அவரது லக்கேஜ் பை மற்றும் பெண்களின் கை பைகளில் 4 கொக்கைன் பாக்கெட்களை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள கொக்கைனை பறிமுதல் செய்து, போதை பொருள்கள் சட்டம் 1985-ன் கீழ் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com