புதுக்கோட்டை: வாகன சோதனையில் சிக்கிய 1 கிலோ கஞ்சா – சிறுவன் உட்பட5 பேர் கைது

புதுக்கோட்டை அருகே இரு வேறு கார்களில் கஞ்சா மற்றும் பட்டாகத்திகளுடன் சென்ற ஐந்து பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Police station
Police stationpt desk

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 1.100 கிலோ கஞ்சாவும் இரண்டு பட்டாகத்திகளும் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இரண்டு கார்களில் வந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.

vehicle search
vehicle searchpt desk

அப்போது அந்தக் காரில் வந்த ஐந்து பேரில், மூவர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த காரில் சென்ற திருக்கோகர்ணம் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் (எ) சரவணபாண்டி (41), கோபாலகிருஷ்ணன் (எ) மதன் (30), விக்னேஸ்வரன் (30), ஆலங்குடி அருகே சூரன் விடுதி தெற்குப்பட்டியை சேர்ந்த குணசேகரன் (43), விராலிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

Police station
வேலூர்: வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

இதையடுத்து காரில் இருந்த கஞ்சா, பட்டா கத்தி, 5 செல்போன்கள் 500 ரூபாய் பணம் ஒரு கடுக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரை புதுக்கோட்டை சிறையிலும் 17 வயது சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com