\
தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது: 4 இளம் பெண்கள் மீட்பு

தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது: 4 இளம் பெண்கள் மீட்பு

தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது: 4 இளம் பெண்கள் மீட்பு
Published on

பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குவாலிட்டி இன் ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் இன்று சம்பவ இடத்திற்கு அதிரடியாக சென்ற பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன் தலைமையில், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கு நடந்த சோதனையில் விடுதியில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாலியல் தொழிலை நடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (39), கடலூரைச் சேர்ந்த சரத்குமார் (25), வண்டலூரைச் சேர்ந்த சக்திவேல் (33), குன்றத்தூரைச் சேர்ந்த திருமலை (35), வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் (32), ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com