\
சென்னை: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது

சென்னை: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது

சென்னை: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது
Published on

சென்னையில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அந்த வீட்டில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 4 பெண்கள் உள்பட 11 பேரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ. 72,780-ஐ பறிமுதல் செய்தனர். கைதான 11 பேர் மீதும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிறகு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com