\
புதுச்சேரி - தமிழகம் கடத்திவந்த 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்- 4 பெண்கள் கைது

புதுச்சேரி - தமிழகம் கடத்திவந்த 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்- 4 பெண்கள் கைது

புதுச்சேரி - தமிழகம் கடத்திவந்த 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்- 4 பெண்கள் கைது
Published on

புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில் நிறைய மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் திண்டிவனம், கிடங்கல் பகுதியைச் சேர்ந்த அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வள்ளி (வயது 40), விஜயா (50), செல்வி (50), கல்பனா (34) என்பதும், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, கடத்திச் சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையில் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com