போதைப்பொருளை தேங்காய் நாரில் வைத்து கஞ்சா கடத்திய நபர்கள் கைது

போதைப்பொருளை தேங்காய் நாரில் வைத்து கஞ்சா கடத்திய நபர்கள் கைது
போதைப்பொருளை தேங்காய் நாரில் வைத்து கஞ்சா கடத்திய நபர்கள் கைது

கனமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆகியவற்றை சாதகமாக பயன்படுத்தி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருளை தேங்காய் நாரில் வைத்து கடத்திச்சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் தென்மாநில பகுதிகளில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் 3 ஆப்ரேஷன்களில் பல்வேறு விதமான போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து வேலூர் பள்ளிகொண்டா, சுங்கச்சாவடி அருகில் கிருஷ்ணகிரி சாலையில் வாகன சோதனை நடத்தினர். வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது 212.5 கிலோ கஞ்சாவை தேங்காய் நாரில் வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. கஞ்சா கடத்திச் சென்ற 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். கஞ்சா கடத்தி வருவதற்கு பாதுகாப்பாக இனோவா காரில் வந்த மேலும் இருவரை சினிமா பாணியில் துரத்திப் பிடித்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் கஞ்சாவை வாங்க வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இருந்து இந்த கஞ்சாவை கடத்தி ஈரோட்டில் சில்லரை விலையில் விற்பனை செய்வதற்கு கொண்டுவரப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சாவை வாங்க வந்த இருவரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் துவங்கிய காரணத்தினால் சென்னை ஆந்திரா பகுதிகளில் கனமழை மற்றும் புயல் உருவாகக்கூடிய வாய்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் வாகனத்தில் கஞ்சாவை கடத்தினால் அதிகாரிகள் சோதனை செய்து கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று திட்டம் தீட்டி கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக வானிலையை சாதகமாக பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்ற ரகசிய தகவல் அடிப்படையில் தான் இந்த கும்பல்களை அதிகாரிகள் கைது செய்தது தெரிய வந்துள்ளது.

இதைபோல சமீபகாலமாக பார்சல் மூலம் நவீன போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தெரியவந்தது. டார்க் வெப் எனப்படும் இணையதளங்கள் மூலம் இந்த போதைப் பொருள் ஆன்லைனில் ஆடர் செய்யப்பட்டு கொரியர் மூலம் அனுப்பப்படுகிறது. குறிப்பாக பரிசுப்பொருள் உணவு பொருட்கள் ஆகியவற்றில் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் பெங்களூரு மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கூரியர் பார்சல் மூலம் கடத்திச் செல்வதை கண்டறிந்தனர். இதனையடுத்து கொச்சின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒரு ஏற்பாடுகளை ஆய்வு செய்ததில் போதைப்பொருட்களான 244 gm of Amphetamine, 25 stamps of LSD and 2 gm of Methaqualone ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக சுவிங்கம் சாக்லெட் பாக்சில் வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த பார்சல் உண்மையாக சென்றடைய வேண்டிய நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இதைப்போல கூரியர் மூலம் போதைப்பொருள் ஆர்டர் செய்து பெற்ற மற்றொரு நபரையும் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிராம் Methamphetamine பறிமுதல் செய்தனர். மொத்தமாக மூன்று ஆபரேஷன்கள் கடந்த ஒன்பது நாட்களில் நடத்தப்பட்டதன் மூலம் 6 பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com