H.raja
H.rajaPT

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக H.ராஜா மீது வழக்குப்பதிவு!

காளையார்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேடையில் மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக H.ராஜா மீது வழக்கு பதிவு.
Published on

காளையார் கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேடையில் மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக H.ராஜா மீது வழக்கு பதிவு.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த 19ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது மேடையில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, மத தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையெல்லாம் இழிவுபடுத்தியும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து திமுக ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி என்பவர் காளையார்கோவில் காவல் நிலையத்தில் H.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வன்முறையை தூண்டும் விதமாகவும், கட்சி தலைவர்களை இழிவுபடுத்தி பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 H.raja
திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்த அவதூறு பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய R.B.V.S.மணியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com