ஸ்ரீபெரும்புதூர்: நடந்து சென்றவரிடம் கூகுள்-பே மூலம் வழிப்பறி... நால்வர் கைது!

சாலையில் நடந்து சென்ற இளைஞரை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.20,000 பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் வசிக்கும் ராம்கி என்பவர், இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை நான்கு பேர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் தர மறுத்தபோது ஆத்திரம் அடைந்த அக்கும்பல், அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. தொடர்ந்து அவருடைய கூகுள் பே மூலம் ரூ.20,000 பணத்தை தங்கள் வங்கிக்கணக்குக்கு மாற்றியுள்ளது அக்கும்பல்.

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள்
வழிப்பறியில் ஈடுபட்டவர்கள்புதிய தலைமுறை

இதனையடுத்து ராம்கி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com