\
ஆந்திராவில் இருந்து 120 கிலோ கஞ்சா கடத்தல் -  4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து 120 கிலோ கஞ்சா கடத்தல் -  4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து 120 கிலோ கஞ்சா கடத்தல் -  4 பேர் கைது
Published on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு 120 கிலோ கஞ்சா கடத்திவந்ததாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் சென்ற காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் 120 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட விசாகப்பட்டினத்தை சேர்ந்த சேர்ந்த பத்ரி ராஜேந்திர பிரசாத், சரவணன், மகேஷ்வர் மற்றும் பிரதா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள்மீது  கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவந்து டெல்டா மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள்மீது வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com