\
வலி நிவாரணி போதைக்காக பயன்படுத்தப்பட்ட சம்பவம் - 4 பேர் கைது

வலி நிவாரணி போதைக்காக பயன்படுத்தப்பட்ட சம்பவம் - 4 பேர் கைது

வலி நிவாரணி போதைக்காக பயன்படுத்தப்பட்ட சம்பவம் - 4 பேர் கைது
Published on: 

வலி நிவாரணி மருந்துகளை போதை பயன்பாட்டுக்காக பதுக்கிவைத்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மயில்கொட்டாய் பகுதியில் உள்ள வஜ்ரவேல் என்பவரைத் தேடி பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வஜ்ரவேலுவிடம் விசாரணை நடத்தியபோது, சோமசுந்தரம் என்பவரின் மருந்துக் கடையில் இருந்து வலி நிவாரணிகளை வாங்கி கூடுதல் விலைக்கு மாணவர்களுக்கு விற்றதாக கூறியுள்ளார். இவ்விருவருடன் பெங்களூருவில் இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுத்த காமராஜ், முருகேசன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com