\
மதுரை: ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை - 4 பேர் கைது

மதுரை: ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை - 4 பேர் கைது

மதுரை: ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை - 4 பேர் கைது
Published on

மதுரை அலங்காநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலைய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று லாட்டரி வாங்குவது போல் நடித்துள்ளனர். அப்போது அங்கு ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது உறுதியானது. இதையடுத்து அங்கு இருந்த 4 நபர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

லாட்டரி விற்பனை செய்து வந்ததாக சத்தியசீலன், அர்ச்சுணன், பிரசாந்த், சப்பாணி ஆகிய நால்வரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3,500 ஐ பறிமுதல் செய்து செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com