அமோக விற்பனையில் 3, 4-ம் நம்பர் லாட்டரி சீட்டுகள்! சாமானியர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

அமோக விற்பனையில் 3, 4-ம் நம்பர் லாட்டரி சீட்டுகள்! சாமானியர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்
அமோக விற்பனையில் 3, 4-ம் நம்பர் லாட்டரி சீட்டுகள்! சாமானியர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

`புதிய தலைமுறை’ கள ஆய்வு எதிரொலியாக, சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி விற்றதாக 18 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் சென்னையில் இன்றளவும் 3 மற்றும் 4 நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புதிய தலைமுறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் புதிய தலைமுறையில் கள ஆய்வு செய்யப்பட்டது. அதன்முடிவில் சென்னை பூந்தமல்லி, போரூர், கிண்டி, ஈக்காடுதாங்கல், அசோக் பில்லர், எம் எம் டி, கோயம்பேடு பாடி அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பூடான் மற்றும் கேரள லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பது அம்பலமானது. பூடான் லாட்டரி 3 நம்பரிலும், கேரளா லாட்டரி 3 மற்றும் 4 நம்பரிலும் விற்கப்படுகிறது.

பூடான் லாட்டரியின் விலை 70 ரூபாய்க்கும், கேரளா லாட்டரி 3 நம்பர் 80 ரூபாய்க்கும், 4 நம்பர் 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பூடான் மற்றும் கேரள லாட்டரிகளில் பரிசு விழுந்தால் 100 முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த விற்பனையாவும், வாட்ஸ்அப் மூலமும் நடப்பது குறிப்பிடத்தக்கது. நேரில் சென்று வாங்க முடியாதவர்கள் கூகுள் பே மூலம் அனுப்பி நண்பரை உறுதி செய்து கொள்கின்றனர். பரிசு தொகை விழுந்தால் அன்று மாலை அல்லது மறுநாள் காலை பரிசு தொகை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் 3 மற்றும் 4 நம்பர் லாட்டரிகளை வாங்குவது விளிம்பு நிலையில் உள்ள சாமானிய மனிதர்களே என்பதே வேதனையாக உள்ளது. குறிப்பாக கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஒட்டுநர், கொத்தனர் வேலை செய்ய கூடிய நபர்கள், சிறு கடை நடத்தி வருவர்கள் என பலரும் இந்த 3 நம்பர் 4 நம்பர் லாட்டரி சீட்டு வாங்குவதை பார்க்க முடிகிறது.

சென்னையில் மட்டும் ஒருநாள் ஒன்றுக்கு தோரயமாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் இதில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் சென்னையில் மட்டும் ஒருநாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. ஆனால் பரிசு தொகையோ 4.5 லட்சம் மட்டுமே. தமிழகம் முழுவதும் இது நடைபெறுவது புதிய தலைமுறை ஆய்வில் தெரியவந்தது. இந்த விஷயத்தை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசு இந்த லாட்டரி விற்பனையை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது.

அதைத்தொடர்ந்து "புதிய தலைமுறை" கள ஆய்வு எதிரொலியாக, சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி விற்றதாக 18 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் சட்டவிரோத லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரிகள் ஒழிக்கும் பொருட்டு நடைபெற்ற சிறப்பு சோதனையை சென்னை காவல்துறை நேற்று நடத்தி உள்ளது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/zcKmfJ5jOg0" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

சட்ட விரோதமாக லாட்டரிகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னை பெருநகர் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் நடைபெற்ற சிறப்பு சோதனையின் காரணமாக, தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக 18 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளது. அதில் 18 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 43 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.13,995 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டகள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- ஆனந்தன், சுப்ரமணியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com