செய்தியாளர்: பிரவீண்
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்பனைக்கு கிடைக்கிறது என்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லெட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 1,14,400 ரூபாய் மதிப்புள்ள சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லெட்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தியது.