வங்கதேசத்தைச் சேர்ந்த 31 பேர் கைதுpt desk
குற்றம்
திருப்பூர்: தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை - வங்கதேசத்தைச் சேர்ந்த 31 பேர் கைது
திருப்பூரில் தீவிரவாத தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வங்கதேச இளைஞர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதாக கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் எஸ்பி பத்ரி நாராயணன், ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர், பல்லடம் அருகே அருள்புரம், செந்தூரன் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
Police stationpt desk
அப்பேர்து போலியான ஆதார் அட்டைகளை கொடுத்து பணியாற்றி வந்த 28 வங்கதேச இளைஞர்களை கைது செய்தனர். மேலும் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு வங்கதேச இளைஞர்களும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வங்கதேச இளைஞரும் என மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.