\
3 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் : ‌4 தனிப்படைகள் ‌விசாரணை

3 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் : ‌4 தனிப்படைகள் ‌விசாரணை

3 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் : ‌4 தனிப்படைகள் ‌விசாரணை
Published on

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் மூன்று வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர்‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குரு,பிரேமலதா தம்பதியின் 3 வயது சிறுவன் விஷ்வா, நேற்று முன் தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வீட்டின் அருகே சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுவனின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக, 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர்‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் விஷ்வாவின் தந்தையுடன் பணிபுரிந்து வந்த டி.பி.குளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் விரைவில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவான் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com