
திருவிடைமருதூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள மூன்று டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருவிடைமருதூர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து காவல் துறையினர் நேற்றிரவு அம்மாசத்திரம் நமச்சிவாய நகரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செல்வகுமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்களுக்குச் சொந்தமான இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில், சுமார் மூன்று டன் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த திருவிடைமருதூர் காவல்நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.