திருச்சி: 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை - 3 தனிப்படைகள் தீவிர விசாரணை

திருச்சி: 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை - 3 தனிப்படைகள் தீவிர விசாரணை
திருச்சி: 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை - 3 தனிப்படைகள் தீவிர விசாரணை

திருச்சி அருகே இயற்கை உபாதைக்கு சென்ற 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதவத்தூர்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி - மகேஸ்வரி தம்பதியினரின் 2-வது மகள் கங்காதேவி(14) அதேபகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் 100 நாள் திட்டத்தில் வேலைக்கு சென்றதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று மதியம் வீட்டின் அருகே இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கங்காதேவி வீடு திரும்பவில்லை.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் சிறுமியை காணவில்லை என தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடந்துள்ளது. ஆடையை வைத்து கங்காதேவிதான் என்பதை பெற்றோர் அடையாளம் கண்டனர். இதுகுறித்து சோமரசன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றினர்.

அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிலர் சிறுமியை கொலை செய்து எரித்துவிட்டு பின்னர் அந்த இடத்தில் உடலை போட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமி உடலை வாங்கமாட்டோம் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com