ஹாசினி குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

ஹாசினி குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

ஹாசினி குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
Published on

குன்றத்தூரில் தனது தாயை கொன்றுவிட்டு தப்பி ஓடிய ஹாசினி குற்றவாளி தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை போரூர் அருகே ஹாசினி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்த கொலையாளி தஷ்வந்த், நிபந்தனை ஜாமீனில்
வெளிவந்துள்ளார். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் குன்றத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த தஷ்வந்த், அவரது தாய்
சரளாவை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். அத்துடன் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார்.  

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படைகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். தஷ்வந்த தனது தாய் சரளாவை
கொன்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதால், வாகனப்பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன்
வெளியூர்களுக்கு செல்லும் வாகன சோதனை சாவடிகளுக்கு வாகனப்பதிவு எண் வழங்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் அறைகளிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தஷ்வந்தின் 2 வார செல்போன் உரையாடல்களை கைப்பற்றியுள்ள
காவல்துறையினர் அதன் அடிப்படையிலும் விசாரத்து வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com