இரட்டைக்கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படை
சென்னைக்கு அருகேயுள்ள திருவேற்காட்டில் பெண்கள் இருவரை கொலை செய்த நபரை கைது செய்யமுடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
திருவேற்காடு அன்புநகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த முனியம்மாளை அவரது உறவினர் பூபாலன் கடந்த 3ஆம் தேதி தலையில் அடித்து கொலை செய்தார். அதனை தடுக்கச்சென்ற முனியம்மாளின் தாய் பாக்கியம்மாளும் தாக்கப்பட்டார். பாக்கியம்மாள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் முனியம்மாளின் உறவினரான பூபாலன் என்பவர் செலவிற்கு பணம் கேட்டு தங்களை தாக்கியதாக கூறினார்.
சிகிச்சை பலனின்றி பாக்கியம்மாளும் உயிரிழந்ததை அடுத்து, காவல்துறையினர் இரட்டைக்கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். தலைமறைவாகவுள்ள பூபாலனின் புகைப்படத்தை மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர். பூபாலனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.