
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சதீஷ்குமாரும் (31), தேனி மாவட்டம் கடமலைகுண்டைச் சேர்ந்த ரம்யாவும் (25) திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர்.
அங்கு இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வது தெருவில் வசித்து வந்தனர். இதையடுத்து ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி நேற்று முன்தினமும் சதீஷ்குமார், ரம்யாவுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் சதீஷ்குமார், ரம்யாவை கட்டையால் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நேற்றிரவு ரம்யாவின் மாமனார், மாமியாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அரசு மருத்துவமனையில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர்.
இதையடுத்து சதீஷ்குமார் (31), சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.