\
சாலையோர வண்டிகளை பதம்பார்க்கும் கும்பல்: வசமாக சிக்கியது..!

சாலையோர வண்டிகளை பதம்பார்க்கும் கும்பல்: வசமாக சிக்கியது..!

சாலையோர வண்டிகளை பதம்பார்க்கும் கும்பல்: வசமாக சிக்கியது..!
Published on

சென்னையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை திருடி, கிராமங்களில் குறைந்த விலைக்கு விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர், பெரம்பூர் பகுதிகளில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி சர்மா நகரிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஹரிஹரன், சங்கரா, நவீன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் 30-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடும் வாகனங்களை 5 ஆயிரம் ரூபாய்க்கு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் அவர்கள் விற்றதும் அம்பலமானது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com