குற்றம்
செஞ்சியில் இளம்பெண் முகம் சிதைக்கப்பட்ட விவகாரம் - 3பேர் கைது
செஞ்சியில் இளம்பெண் முகம் சிதைக்கப்பட்ட விவகாரம் - 3பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் வணிக வளாகத்தில் முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் மீட்கப்பட்ட விவகாரத்தில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதியானதையொட்டி, குபேரன், துரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பலத்த காயங்களோடு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சென்ற விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ் அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாமல் திரும்பிச் சென்றார். அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.