Accused
Accusedpt desk

பழனி: வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை – பல வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது

பழனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு விவசாய பணிகளுக்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இவர், இது குறித்து சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Arrested
Arrestedpt desk

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த விஜயகுமார், தஞ்சாவூரைச் சேர்ந்த அஜய் பிரவீன் , திருச்சியை சேர்ந்த யாழின் ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Accused
வேலூர்: காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் நூதன மோசடி - ஆட்டோ ஓட்டுநரிடம் பணத்தை ஏமாற்றிய நபர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com