\
கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது
கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பேர் கைதுjpt desk

திருப்பத்தூர்: இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை... 3 பேர் கைது

திருப்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பேரை எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்பி தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

Arrested
Arrestedpt desk

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பாச்சல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (32) கொரட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் இரண்டு பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவர்களை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது
கர்நாடகா: கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு – பெற்றோருக்கு தீவிர சிகிச்சை

மேலும் இது தொடர்பாக நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com