Accused
Accusedpt desk

சென்னை: சோதனையில் சிக்கிய வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் - விற்பனை செய்ததாக 3 பேர் கைது

சென்னையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்த மூன்று பேர் கைது. அவர்களிடம் இருந்து ரூ 3.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

செய்தியாளர்: சாந்தகுமார்

வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் சட்டத்துக்குப் புறம்பாக கொண்டு வரப்படும் மதுபானங்களை வாங்கி, பர்மா பஜாரில் பதுக்கி வைத்து பின்னர் அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர் சிலர். இதுதொடர்பாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Arrested
Arrestedfile

அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் திருவான்மியூர் அஞ்சல் நிலையம் அருகே மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த மதன் (34), ஷபீர் அகமது (33), ஷாகுல் (30), ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர் காவல்துறையினர்.

Accused
சாட்டை துரைமுருகன் மீதான வழக்கு ரத்து? நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம்.. நடப்பது என்ன?

மேலும் மூன்று பேரும் பதுக்கி வைத்திருந்த, 3.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 80 வெளிநாட்டு மது பாட்டில்கள் மற்றும் 120 புதுச்சேரி பீர் பாட்டில்கள், வோட்கா, ஒயின் உள்ளிட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com