சென்னை அம்பத்தூரில் கல்லால் தாக்கி வேன் ஓட்டுநரிடம் பணம் பறிப்பு... 3 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் கல்லால் தாக்கி வேன் ஓட்டுநரிடம் பணம் பறிப்பு... 3 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் கல்லால் தாக்கி வேன் ஓட்டுநரிடம் பணம் பறிப்பு... 3 பேர் கைது
Published on

அம்பத்தூர் அருகே வேன் ஓட்டுநரை கல்லால் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னை முகலிவாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விண்ணரசு (26). வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று இரவு சண்முகபுரம் அருகே வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து விண்ணரசை தலையில் கல்லால் தாக்கி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 1,000 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து விண்ணரசு அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அம்பத்தூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் (21), அம்பத்தூர் சூரப்பட்டு விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜ சேகர் (25), அம்பத்தூர் சண்முகபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த சூர்யா (22) ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com