\
அரசு பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய வழக்கில் 3 பேர் கைது

அரசு பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய வழக்கில் 3 பேர் கைது

அரசு பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய வழக்கில் 3 பேர் கைது
Published on

விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்தி தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் சென்ற அரசு பேருந்தில், சில்லறை பாக்கி தொடர்பாக பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண்ணின் உறவினர்கள் 6 பேர் கொண்ட கும்பல், விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் இருந்த நடத்துனரை ஆட்டோவில் தூக்கி சென்று தாக்கியதாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் நேற்று விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் மற்றும் பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த கோவிந்தன், மோகன்ராஜ், வெங்கடேசன், அசோக்குமார், சிங்காரவேலு, மற்றுமொருவர் என 6 பேர் மீது கும்பலாக தாக்கியது, கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கோவிந்தன், மோகன்ராஜ், அசோக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்துள்ள போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்து மூன்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்,

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com