2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - விசிக நிர்வாகி போக்சோவில் கைது

2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - விசிக நிர்வாகி போக்சோவில் கைது
2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - விசிக நிர்வாகி போக்சோவில் கைது

தென்காசியில் 2- ஆம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வார்டு உறுப்பினர் வீராசாமி என்பவரை குற்றாலம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை  பகுதியில் வசிக்கும்  கூலித்தொழிலாளி முருகன், மாலா தம்பதியின் மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சிறுமி பள்ளிக்கு சென்று  வீடு திரும்பிய நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை தனிமையில் அழைத்து சென்று  தவறுதலாக நடந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், சிறுமிக்கு வயிறு வலி ஏற்படுவே பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமி நடந்த உண்மையை கூறியதன் அடிப்படையில் பெற்றோர் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து விசாரணை செய்த குற்றாலம் காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்ட வீராச்சாமி என்பவரை விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வீராச்சாமி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும், குணராமநல்லூர் பஞ்சாயத்தில் 15-ஆவது வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com