குட்கா விற்பனை: தமிழகம் முழுவதும் 8 நாட்களில் 2,983 பேர் கைது

குட்கா விற்பனை: தமிழகம் முழுவதும் 8 நாட்களில் 2,983 பேர் கைது
குட்கா விற்பனை: தமிழகம் முழுவதும் 8 நாட்களில் 2,983 பேர் கைது

தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களில் குட்கா விற்பனை செய்ததாக 2000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 15டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வோர் மற்றும் பதுக்கி வைப்போர் மீது காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 8 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியதாக 239 வழக்குகள் பதியப்பட்டு 324 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 2,940 வழக்குகள் பதியப்பட்டு 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 3,818 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்ததாக 154பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com