\
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு... முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு... முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு... முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை
Published on

15 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை (மனநல வளர்ச்சி குன்றியவர்) கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி (எ) ராஜமாணிக்கம் (70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, இதன் விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று டநீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிக்கு மூன்று பிரிவுகளில் 29 ஆண்டு ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால் மேலும், மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com