\
திருப்பூரில் சாக்கடையில் வீசப்பட்ட சூட்கேசில் 25 வயது பெண் சடலம் மீட்பு

திருப்பூரில் சாக்கடையில் வீசப்பட்ட சூட்கேசில் 25 வயது பெண் சடலம் மீட்பு

திருப்பூரில் சாக்கடையில் வீசப்பட்ட சூட்கேசில் 25 வயது பெண் சடலம் மீட்பு
Published on

திருப்பூரில் சூட்கேசில் வைத்து பெண் சடலத்தை சாக்கடையில் வீசியுள்ளனர் காவல்துறையினர். வீசிச்சென்றவர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரிலுள்ள புதுநகர் பகுதியில் சாக்கடையில், இன்று காலை சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்டு மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சூட்கேஸை ஆய்வு செய்ததில், அதில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com