\
ராஜஸ்தான்: இளைஞர்களை நம்பி வேலை தேடிச் சென்ற 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ராஜஸ்தான்: இளைஞர்களை நம்பி வேலை தேடிச் சென்ற 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ராஜஸ்தான்: இளைஞர்களை நம்பி வேலை தேடிச் சென்ற 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
Published on

ராஜஸ்தான் மாநிலம் சுரு நகரத்தில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானிலுள்ள சுரு நகரத்தில் வேலை வாங்கித்தருவதாக 25 வயது பெண்ணை ஏமாற்றி அழைத்துச்சென்ற இளைஞர்கள் 4 பேர் அவரை மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் கை, கால்களை கட்டி மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டிருக்கின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக கயிறு கம்பி ஒன்றில் சிக்கியதால் அந்த பெண்ணின் அந்தரத்தில் தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். அந்தப் பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்தபிறகு, அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக, டிஎஸ்பி மம்தா சரஸ்வத் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com