புதுக்கோட்டை: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

புதுக்கோட்டை: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
புதுக்கோட்டை: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 17 வயது சிறுமியை இரண்டு மாத கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜகோபால் (23). இவர் கல்லு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த 17 சிறுமி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ராஜகோபால் இரண்டு மாத கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், போலீசார் ராஜகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட சிறுமியை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com