ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக 5 சிறுவர்கள் உட்பட 21 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக 5 சிறுவர்கள் உட்பட 21 தமிழர்கள் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக 5 சிறுவர்கள் உட்பட 21 தமிழர்கள் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கடப்பாரை, கோடாரி மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செயல்பட்டுவரும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், புத்தூர் அடுத்த உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்திய போது,  தமிழகத்தில் இருந்து வந்த ஒரு லாரியை சோதனையிட்டனர்.அந்த  லாரிக்குள் 20-க்கும் மேற்பட்டோர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. லாரியில் இருந்த ஓட்டுநர் உள்பட 21 பேரை கைது செய்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் 5 சிறுவர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அமரேசன் என்ற மேஸ்திரி அழைத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கடப்பாரை, கோடாரி மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை சிறுவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். செம்மரம் வெட்ட ஆட்களை அழைத்து சென்ற அமரேசன் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com